துக்க வீட்டில் நடந்த துயர சம்பவம்! ஒரே நாளில் தந்தை, மகன்... இருவரை பறிகொடுத்து கதறிய அழுத பெண்.... | Pudukottai

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தாத்தாவின் இறுதிச் சடங்கிற்கு சென்ற பேரன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக இறந்துள்ளார். துக்க நிகழ்வில் பங்கேற்க, சென்னையில் உள்ள ஆறுமுகத்தின் மகள், தனது கணவர் மற்றும் 2 பிள்ளைகளுடன் சென்றுள்ளார். ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டின் சுவற்றில் உள்ள கம்பியில் இருந்து துணிகளை எடுக்க முயன்றபோது, லெனின் என்பவரை மின்சாராம் தாக்கியுள்ளது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அவரது தங்கை ஜான்சிராணி, லெனினை காப்பாற்ற முயன்றபோது, அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த 13 வயது சிறுவனையும், மின்சாரம் தாக்கியது. இதில் 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்ற 2 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த தாய், தனது மகனை பறிகொடுத்து கதறி அழுத சம்பவம், காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்