30 மாத நிலுவை ஊதியம் வழங்க கோரிக்கை... மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த அமுத சுரபி ஊழியர்கள்

x
  • புதுச்சேரியில், 30 மாத நிலுவை ஊதியம் வழங்கக்கோரி அமுத சுரபி ஊழியர்கள், மூன்றாம் மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
  • புதுச்சேரியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபி சூப்பர் மார்க்கெட்டாக மாற்றப்பட்டது.
  • சந்தை விலையை விட மிகக்குறைவான விலையில் இங்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
  • பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • இந்நிலையில், நிலுவை ஊதியம் வழங்கக்கோரி அமுதசுரபி கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் 100-க்கும் மேற்பட்டோர் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்