"சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை" - அரசு விடுத்த எச்சரிக்கை

x

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால், பெற்றோருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என, புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது...

புதுச்சேரியில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால், அவர்களது பெற்றோருக்கு மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், வாகனத்தின் பதிவுச்சான்றிதழ் 12 மாதங்கள் வரை ரத்து செய்யப்படும் எனவும், விதி மீறலில் ஈடுபடும் சிறார்களுக்கு, 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்க தடை விதிக்கப்படும் எனவும், அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்