"சால்னா, சாஸ் எக்ஸ்ட்ரா இல்லையா" - கரண்டியால் ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல் -பரபரப்பு சிசிடிவி காட்சி

x

புதுச்சேரியில் ஓட்டலில் கூடுதலாக சால்னா கேட்டு அதை தராத ஆத்திரத்தில் கடை ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள உணவு விடுதிக்கு வந்த 2 இளைஞர்கள் நூடுல்ஸ் மற்றும் பரோட்டா வாங்கி உள்ளனர். அப்போது அவர்கள் கூடுதலாக சால்னா மற்றும் சாஸ் கேட்டதாக கூறப்படுகிறது. கடை ஊழியர் தர மறுக்கவே கோபமடைந்த அவர்கள்,

அங்கிருந்த கடாய் மற்றும் கரண்டியால் ஓட்டல் ஊழியரை தாக்கினர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்