போலி பத்திரம் மூலம் ரூ.6.5 கோடி நிலத்தை அபகரித்த ஒய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்
புதுச்சேரியில் கோயில் நிலத்திற்கு போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த 4 பேரை, சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான, 6 கோடியே 50 லட்சம் மதிப்பிலான காலி நிலத்தை, போலி கும்பல் ஒன்று போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் புதுச்சேரியை சேர்ந்த ரத்னவேல் என்பவர், போலி பத்திரம் மூலம் கோயில் நிலத்தை அபகரித்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து ரத்னவேலின் மனைவி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story