குஜராத் கலவரம் குறித்துஆவணப்படம்,பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதி மறுப்பு, இரு தரப்பு மாணவர்களிடையே தள்ளுமுள்ளு
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை பல்கலைக்கழகத்தில் திரையிடுவது தொடர்பாக நேர்ந்த தகராறில், இரு தரப்பு மாணவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் ஒன்றை, சர்வதேச ஊடகம் அண்மையில் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்திற்கு இந்தியா தடை விதித்தது. இதனை புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் திரையிடுவதற்காக, எஸ்.எஃப்.ஐ பிரிவு மாணவர்கள் அனுமதி கோரியிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் ஆங்காங்கே நின்று கொண்டு, தங்கள் செல்போன்களில் அந்த ஆவணப்படத்தை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏ.பி.வி.பி பிரிவு மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியதால், இரு தரப்பு மாணவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.