"பிரதமர் காப்பீட்டுத் திட்டம் என கூறி பிஜேபி-யில் சேர்த்ததாக குற்றச்சாட்டு" - பாஜக நிர்வாகியிடம் பொதுமக்கள் வாக்குவாதம் - வைரல் வீடியோ

x

பிரதமரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பதாக கூறி பொதுமக்களை பாஜகவில் இணைக்கும் நிகழ்வு உடுமலைப்பேட்டையில் அரங்கேறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் நாகமானிக்கம், காப்பீடு அட்டை இல்லாத பொதுமக்களுக்கு பிரதமந்திரி காப்பீட்டு விண்ணப்பங்களை பூர்த்திசெய்து கொடுத்து வந்துள்ளார். அதற்காக கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த சிலரிடம் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அபூதாகிர் என்பவரது மனைவியின் செல்பேசி எண்ணிற்கு பா.ஜ.காவில் சேர்ந்ததாக குறுந்தகவல் வந்துள்ளது. இது குறித்து நாகமாணிக்கத்திடம் விளக்கம் கேட்டு அபூதாகிர் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. உறுப்பினர்களை பாஜகவில் சேர்க்க வேண்டுமெனில் அனுமதி கேட்க வேண்டும் எனவும் அபூதாகிர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


Next Story

மேலும் செய்திகள்