Chicken Dinner சாப்பிட ரெடியா கண்ணு..பெற்றோர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் PUBG..Alert..!
பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டு, கட்டுப்பாடுகளுடன் இந்தியாவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்...
சீன ஆன்லைன் விளையாட்டான பி.ஜி.எம்.ஐ கேம்-ஐ, கிராஃப்டான் நிறுவனம் வடிவமைத்தது.
உலக அளவில் பப்ஜி விளையாட்டை மார்ச் 19, 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இளைஞர்கள் சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த கேமிற்கு கோடிக்கணக்கானோர் இந்த விளையாட்டில் மூழ்கினர். இந்தியாவிலும் ஏராளமான இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகினர்..
கடந்த 2020 ஜூன் மாதம் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தினர் சுமார் 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சீனாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.
முதற்கட்டமாக 50 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பப்ஜி, டிக் டாக், யூசி ப்ரவுசர் உள்ளிட்ட பல முன்னணி செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டன. இந்தியர்களின் பாதுகாப்புக்காக சீன செயலிகள் தடை விதிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. செப்டம்பர் 2, 2020 முதல் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு முழுவதுமாக முடிவுக்குவந்தது.
இதை தொடர்ந்து பேட்டில் கிரவுண்ட் எனப்படும் தென் கொரியாவின் கிராப்டன் நிறுவனம், பி.ஜி.எம்.ஐ.எனப்படும், 'பேட்டில் கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா' என்ற விளையாட்டை இங்கு அறிமுகப்படுத்தியது.
பப்ஜிக்கு மாற்றாக இந்த விளையாட்டு பிரபலம் அடைந்தது. 10 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்தனர்.
இந்நிலையில், சீனாவின் 'டென்சென்ட்' என்ற நிறுவனத்துடன், கிராப்டன் நிறுவனம் இணைந்து செயல்பட்டு வந்ததை அடுத்து, பி.ஜி.எம்.ஐ., விளையாட்டுக்கும் கடந்த ஆண்டு ஜூலையில் தடை விதிக்கப்பட்டது.
மத்திய அரசின் தனிநபர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்பதாகவும், இந்தியாவுக்கென தனியாக, 'சர்வர்' உள்ளிட்ட தொழில்நுட்பங்களை வடிவமைப்பதாகவும் கிராப்டன் நிறுவனம் தற்போது உறுதி அளித்திருப்பதை தொடர்ந்து, பி.ஜி.எம்.ஐ., விளையாட்டுக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.
இந்த அனுமதி 3 மாத சோதனை அடிப்படையில் இருக்கும் என்றும் அதன்பின்னர் அரசு முடிவெடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
BGMI மீண்டும் வருகிறது என்ற அறிவிப்பு கேம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள அதே நேரம் பெற்றோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.