பெரு அதிபருக்கு எதிரான போராட்டங்கள்... ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்கும் போலீசார் - கலவர பூமியாக காட்சியளிக்கும் பெரு
பெரு அதிபர் பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
முன்னாள் அதிபர் காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு, டீனா பொலுவார்டே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதிருந்தே போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையில் இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
லிமாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் விரட்டி அடித்தனர்...
இதில் சிலர் காயம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story