பாஜக சார்பில் போராட்டம்..? அண்ணாமலையின் அதிரடி முடிவு
கள்ளச் சாராயத்தைத் தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் போலி மதுபானங்களால் தஞ்சாவூரில் ஒரு உயிரிழப்பு நிகழ்ந்திருப்பதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில், மதுக் கடை திறப்பதற்கு முன்னரே, கள்ளச் சந்தையில் விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த குப்புசாமி என்ற முதியவர், மரணமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
போலி மதுபானத்தை உற்பத்தி செய்த ஆலையின் உரிமையாளர், டாஸ்மாக் நிர்வாகத்தினர் மற்றும் துறையின் அமைச்சரை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றதாக கூறியுள்ள அண்ணாமலை, இதே கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று, கூறியுள்ளார்.
Next Story