ஆன்லைன் ஆப் மூலம் விபச்சார தொழில்-பணம் கட்டியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

x

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர், மோசடி கும்பல் பற்றிய புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். லோக்கண்டோ வளைதலத்தில், மாடல் அழகிகளோடு உல்லாசமாக இருக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்ததாகவும், அதனை நம்பி கிட்டத்தட்ட 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை அனுப்பி ஏமாந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அந்த இளைஞரின் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், செல்போன் எண்களை ட்ராக் செய்து பார்த்த போது, அந்த அழைப்புகள் அத்தனையும் மும்பையில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் வட நாட்டு திருடர்களின் வழக்கமான சைபர் கைவரிசையாக இருக்காலம் என சந்தேகபட்ட போலீசார் மும்பைக்கு விரைந்திருக்கிறார்கள். சம்மந்தபட்ட செல்போன் சிக்னல் மற்றும் கே.ஒய்.சி தரவுகள் அடிப்படையில் குற்றவாளிகள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த போலீசார், அந்த மோசடி கும்பலை அவர்களது கூடாரத்தில் வைத்தே தட்டி தூக்கி இருக்கிறார்கள்.

அப்போது தான் போலீசாருக்கு மிகபெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த மோசடி வேலையை செய்தவர்கள் அத்தனை பேரும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரனையில், அந்த கும்பலின் தொழில் ரகசியம் அத்தனையையும் கக்கி இருக்கிறார்கள். தற்போது சிக்கி இருக்கும் குற்றவாளிகளில் ஒருவரான அப்சல் ரகுமான் என்பவர் தான் இந்த மோசடி கூட்டத்தின் தலைவன். சீக்கிரமாக வாழ்க்கையில் செட்டிலாக நினைத்த இவர் சொகுசு வாழ்க்கைகாக, ஆன் லைன் மோசடியில் இறங்கி கோடிகளில் சம்பாதிக்கலாம் என திட்டம் போட்டிருக்கிறார். தனியாக எதையும் சாதிக்க முடியாது என்பதால் தன்னை போலவே பணத்தாசை கொண்ட சில இளைஞர்களை சேர்த்துக் கொண்டு ஒரு மெகா திட்டத்திற்கு தயாராகி இருக்கிறார் அப்சல் ரகுமான். தங்களது மோசடி வேலைக்கு ஏற்ற இடமாக மும்பையை தேர்ந்தெடுத்தவர்கள், அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கடையை திறந்திருக்கிறார்கள்.

லொகண்டோ போன்ற ஆப்களில் கால் கேர்ல்ஸ் மற்றும் கால் பாய்ஸ் கிடைப்பதாக கவர்ச்சிகர விளம்பரங்களை வாரி விட்டிருக்கிறார்கள். கால் கேர்ல்ஸ் இருப்பதாக விளம்பரம் கொடுத்த கும்பல், தங்களுக்கு அனைத்து மாநிலங்களிலும் கிளைகள் இருப்பதாகவும், பணத்தை அனுப்பிய அடுத்த சில மணி நேரங்களில் ஒரு அழகிய பெண் உங்கள் வீட்டு கதவை தட்டுவார் எனவும் இளைஞர்களின் ஹார்மோன்களை கண்டபடி தூண்டி விட்டிருக்கிறார்கள். இதை நம்பிய பல தமிழக இளைஞர்களை 3 ஆயிரத்தில் தொடங்கி 30 ஆயிரம் வரை பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். அப்படித்தான் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் 7 லட்சம் ரூபாயை பல தவனைகளாக அனுப்பி இருக்கிறார். பணம் டெபிட்டான மெசேஜ் டோன் தான் வந்ததே தவிர எந்த அழகிகளும் காலிங் பெல்லை அழுத்தவில்லை. 7 லட்ச ரூபாயை பறிகொடுத்த பிறகு உஷாரான அந்த இளைஞர், கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தின் கதவை தட்டி இருக்கிறார். இந்த விளம்பரங்களை பார்த்து ஆண் விபச்சார்த்தில் ஈடுபட ஆசைப்பட்ட சில இளைஞர்கள் , அந்த மோசடி கும்பலுக்கும் தங்கள் ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்த ஆவணங்களை வைத்து போலியான வங்கிக் கணக்குகளை தொடங்கிய மோசடி கும்பல் அதன் மூலம் பண பரிவர்தனைகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

மேலும் கொள்ளையடித்த பணத்தில் கோவா, போன்ற நகரங்களுக்குச் சென்று உல்லாசமாக வாழ்ந்து வந்த கும்பலை தற்போது போலீசார் சிறையில் வைத்து விசாரித்து வருகிறார்கள். கைதான 7 பேரிடமிருந்து மோசடிக்கு பயண்படுத்திய 36 சிம்காட் , 34 செல்போன், 15 வங்கி அட்டை மற்றும் ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறதுமுழுமையான விசாரனைக்கு பிறகே, இவர்கள் சுருட்டிய மொத்த பணம் எவ்வளவு, இந்த மோசடி கூட்டணி உருவானது எப்படி என்ற முழு பின்னணியும் தெரிய வரும்.


Next Story

மேலும் செய்திகள்