"15 நாட்களில் ரூ.275 கோடி சொத்து வரி வசூல்" - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சியில் கடந்த 15 நாட்களில் 275 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊக்கத் தொகையாக 6 கோடி ரூபாய் வழங்கி உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துகிறார்கள். சரியாக செலுத்துவோருக்கு 5 சதவீத ஊக்கத் தொகை, அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 15-ம் தேதி மாலை வரை 275 கோடி ரூபாய் சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 6 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story