6 வருடங்களில் இவ்வளவா? ஒரே மாதத்தில் கோடி கணக்கில் சேர்த்த சொத்து..! பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு வந்த சிக்கல்

x

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் ஜாவித் பஜ்வாவின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கடந்த 6 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக 2016இல் பதவியேற்ற ஜெனரல் ஜாவித் பஜ்வாவின் பதவி காலம் டிசம்பர் 10இல் முடிவடைய உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் அவரின் குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ஆயிரத்து 270 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக Fact Focus என்ற பத்திரிக்கையில் புலனாய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. பல்வேறு ஆதாரங்கள், தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இதில், ஜெனரல் பஜ்வாவின் மனைவி, மகன்கள் மற்றும் மருமக்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள பண்ணை வீடுகள், மால்கள், தொழில் நிறுவனங்கள்,

வெளிநாட்டு சொத்துகள் பற்றிய விவரங்கள் பட்டியலிப்பட்டுள்ளன. ஒரு இளம் குடும்ப உறுப்பினரின் சொத்து மதிப்பு ஒரே மாதத்தில் சில ஆயிரம் ரூபாயில் இருந்து 127 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் வெளியானது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பாகிஸ்தான் நிதியமைச்சர் இஸாக் தார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்