ரூ.2,624 கோடி லாபம்! - புதிய உச்சத்தில் இந்தியாவின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனம்!
- 2022 மார்ச் காலாண்டில் ஆயிரத்து 839 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், 2023 மார்ச் காலாண்டில் 2 ஆயிரத்து 624 கோடி ரூபாயாக, 43 சதவீதம் அதிகரித்துள்ளது.
- மொத்த வருவாய், மார்ச் காலாண்டில் 32 ஆயிரத்து 48 கோடி ரூபாயாக, 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
- முழு ஆண்டிற்கான லாபம், 8 ஆயிரத்து 49 கோடி ரூபாயாக, இரு மடங்கு அதிகரித்துள்ளது.
- மார்ச் காலாண்டில், மாருதி கார்கள் விற்பனை 5.14 லட்சமாக, 5.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பங்கு ஒன்றுக்கு 90 ரூபாய் டிவிடென்ட் அளிக்க, மாருதி சுஸூக்கி நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலை ஒன்றை, 24 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்க மாருது சுஸூக்கி திட்டமிட்டுள்ளது.
- மாருதி சுஸூக்கி வசம் 45 ஆயிரம் கோடி ரூபாய் கைவசம் உள்ளதால், கடன் வாங்காமல், சொந்த பணத்தில் இதை கட்டமைக்க உள்ளது.
Next Story