"பசு வதை தடுக்கப்பட்டால் பூமியின் பிரச்சினைகள் தீரும்" - குஜராத் நீதிபதிகளின் சர்ச்சை கருத்து

x

பசு வதை தடுக்கப்பட்டால் உலகில் உள்ள அத்தனை பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என குஜராத்தில் உள்ள தபி மாவட்ட நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.


பசுக்கள் கடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், குற்றவாளிக்கு தபி மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பில், பசுக்கள் வெறும் விலங்குகள் கிடையாது என்றும், தாய்க்கு சமமானவை என்றும் தபி மாவட்ட நீதிமன்றம் கூறி உள்ளது.

மாட்டு சாணத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் கதிர்வீச்சை தடுக்கக் கூடும் என்றும், பசுவின் கோமியம் பல்வேறு நோய்களை குணப்படுத்தக் கூடியது என்றும் தீர்ப்பில் குஜராத் நீதிமன்றம் கூறி உள்ளது.

நோய்களைக் கோமியம் குணப்படுத்தும் என அறிவியல்பூர்வமாக இதுவரை நிரூபணம் ஆகாத நிலையில், குஜராத் நீதிமன்றம் இவ்வாறு கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்