தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் - "வயதான தம்பதி கண்ணீர் மல்க போராட்டம்"
சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்ததை கண்டித்து, தாம்பரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அமர்ந்து வயதான தம்பதி போராட்டம் நடத்தினர்.
பெருங்களத்தூரைச் சேர்ந்த முத்து என்பவர், தாம்பரத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மாத தவணைக்கு சரக்கு வாகனம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஒன்பது தவணை மட்டும் நிலுவை இருக்கும் நிலையில், முத்துவை தாக்கிவிட்டு, சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதை கண்டித்த முத்து அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பைனான்ஸ் நிறுவனத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், வாகனத்தை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
Next Story