பிரதமரின் அமெரிக்க விசிட்.. சத்தமே இன்றி கையெழுத்தான ஒப்பந்தம் - உலக நாடுகளை அலற விடும் பயங்கர ஆயுதம்.. மத்திய அரசின் திட்டத்தை போட்டுடைத்த காங்.,
நான்கு மடங்கு அதிக விலையில் ட்ரோன்களை பாஜக அரசு வாங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
கடந்த வாரம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது, ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ௩௧ பிரிடேட்டர் ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இவற்றில் 16 Sky Guardian ரக ட்ரோன்கள், 15 Sea Guardian ரக ட்ரோன்கள் ஆகும்.
36 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானங்கள், 1,700 கிலோ எடை கொண்ட குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை ஏற்றி சென்று, இலக்குகள் மீது துல்லிய தாக்குதல் நடத்தக்கூடியவை.
மிகப் பெரிய பரப்பளவு கொண்ட கடல் மற்றும் நிலப் பகுதிகளை, சக்தி வாய்ந்த வீடியோ கேமிராக்கள் மூலம் கண்காணிக்கவும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
31 பிரிடேட்டர் ட்ரோன்களின் மொத்த விலை பற்றிய விவரங்களை மத்திய அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இவற்றின் மொத்த விலை பற்றி பல்வேறு கணிப்புகள், யூகங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. இவை அனைத்தும் பொய்யான, உள்நோக்கம் கொண்ட பதிவுகள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவற்றின் மொத்த கொள்முதல் விலை 25,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஒரு ட்ரோனின் விலை 880 கோடி ரூபாய் என்றும், இதர நாடுகள் அளிக்கும் விலையை விட இந்தியா 4 மடங்கு அதிக விலைக்கு கொள்முதல் செய்வதகாவும் குற்றம் சாட்டினார்.
ராபேல் போர் விமானங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள் இதிலும் தொடர்வாதக கூறியுள்ளார்.
ட்ரோன்களின் விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.