"குறைந்த கல்வி தகுதி கொண்ட பிரதமர் நாட்டிற்கு ஆபத்து"- பிரதமர் மோடிக்கு மணிஷ் சிசோடியா கடிதம்

x

அண்மை காலமாக பிரதமர் மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. இந்த நிலையில் சிறையில் இருந்தபடி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மணிஷ் சிசோடியா, எந்தவொரு சமுதாயத்திற்கும் கல்வியே அடித்தளம் என தெரிவித்துள்ளார். சமுதாயத்தில் கல்வியை வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர், கடந்த சில ஆண்டுகளில் 60 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பிரதமரால் கல்வி மற்றும் அறிவியலின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியாது என தெரிவித்த அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு படித்த பிரதமர் அவசியம் எனவும், குறைந்த கல்வித் தகுதி கொண்டவர் பிரதமராக இருப்பது நாட்டிற்கு ஆபத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்