ஜெர்மனி பிரதமரை பாரம்பரிய முறைப்படி வரவேற்ற பிரதமர் மோடி
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸிற்கு குடியரசு தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட மரியாதை அளிக்கப்பட்டது.
இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஜெர்மன் பிரதமரை, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர்.
பின்னர், குடியரசு மாளிகைக்கு வருகை தந்த அவருக்கு, இந்திய வீரர்களின் பாரம்பரிய மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தியாவின் வருகை குறித்து பேசிய பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், இந்தியா மற்றும் ஜெர்மன் உடனான உறவு மேலும் வலுப்பெறும் என்றும், தற்போது நடைபெறும் சந்திப்பில் இருநாட்டின் வளர்ச்சி குறித்தும், உலக அமைதி குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றார்.
Next Story