மன் கி பாத் உரையில் பேசிய பிரதமர் மோடி - ஜி20 நாடுகளுக்கு தலைமை வகிப்பது புதிய உச்சம்

x

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முக கவசம் அணிவது உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இருக்கும் இந்தியா, வர்த்தக ஏற்றுமதியில் வலிமையை பறைச்சாற்றுவதாக பெருமிதம் கொண்டார். விளையாட்டு துறையில் காமன்வெல்த், மகளிர் ஹாக்கி போன்றவற்றில் இளைஞர்கள் தங்களின் ஆற்றலை உலகிற்கு பறைச்சாற்றியதாக குறிப்பிட்டார். பாரதம் உன்னத பாரதம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள், ஒற்றுமை எடுத்துரைத்ததாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருப்பது புதிய உச்சம் என்றும் குறிப்பிட்டார். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நினைவு கூர வேண்டும் என்றார். மேலும், முன்னாள் பிரதமர் வாய்பாயை நினைவு கூர்ந்த அவர், உட்கட்டமைப்பு, மருத்துவம் மற்றும் கல்வி என அனைத்து துறைகளிலும் இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் என புகழ்ந்தார்


Next Story

மேலும் செய்திகள்