வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் - போரில் இறங்கும் அமெரிக்காவின் பேட்ரியாட் -புதின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணைகளை கொண்டு உக்ரைனால் ரஷ்யாவின் திட்டங்களை தடுக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
x

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்த பின், உக்ரைனிற்கு அதி நவீன பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்ய ஏவுகணைகளை இடை மறித்து, சுட்டு வீழ்த்தும் திறன் கொண்ட பேட்ரியாட் ஏவுகணைகளை செயலிழக்க செய்ய புதிய வழிமுறையை ரஷ்யா உருவாக்கும் என்று வியாழன் அன்று, புதின் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார். உக்ரைனுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக கூறியுள்ளார். இதற்கு பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் என்றார். பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர புதின் இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி அவநம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்