குடியரசுத் தலைவர் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு!
இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் ஏற்பாடுகளை, சட்டப்பேரவை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனித்தனர்.
இந்த தேர்தல் வாக்குப்பதிவுக்கு வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பச்சை நிறத்தில் வாக்குச்சீட்டும், எம். எல்.ஏ.க்கு 'பிங்க்' நிற வாக்குச் சீட்டும் தரப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிவரை நடக்கிறது. தமிழக சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களின் வருகைக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இன்று 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் பார்வையாளராக உத்தர பிரதேசத்தை சேர்ந்த புவனேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்., தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு ஆகியோர் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.