பிரசாரத்தின்போது மசூதியில் ஒலித்த பாங்கு.. உடனே கண்களை மூடி மவுனமான பிரேமலதா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர தினம் தினம் புதிய பிரச்சார யுக்திகளை அரசியல் கட்சியினர் புகுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பூங்குன்றனார் வீதியில் கலைக்குழுவினரைக் கொண்டு எம்ஜிஆரின் தத்துவ பாடல்களுக்கு, எம்ஜிஆர் போல் வேடம் அணிந்து நடனமாடி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து, அக்ரஹாரம், திருநகர்காலனி, கள்ளு பிள்ளையார் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பிரசாரம் மேற்கொண்டார்.
திறந்தவேனில் நின்று பொதுமக்கள் மத்தியில் வாக்குசேகரித்து கொண்டிருந்த போது அக்ரஹாரம் பள்ளிவாசலில் பாங்கு ஒலித்ததால், தனது பேச்சை நிறுத்தி விட்டு, காத்திருந்தார்.
Next Story