கர்ப்பிணி பெண் திடீர் மரணம்.. தற்கொலையா.... கொலையா...? - தீவிர விசாரணை

x
  • சேலம் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • ஓமலூர் அடுத்த கருத்தானூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ் மற்றும் மகாநதி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
  • இந்நிலையில், இரண்டாவதாக மகாநதி கர்ப்பமான நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
  • இதில், பெண் குழந்தையை ரமேஷ் அழைத்து சென்றதாகவும், அதனால் மன உளைச்சலில் இருந்த மகாநதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்நிலையில், மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மகாநதியின் பெற்றோர் போலீசில் புகாரளித்த நிலையில், பெண் தற்கொலை செய்துகொண்டாரா?... இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • இதனிடையே, திருமணமாகி 4 ஆண்டுகளேயான நிலையில், இது குறித்து கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்