வயிற்றில் எட்டி உதைத்த 'ஆசை' கணவனை தட்டி கேட்டவர்களை மூஞ்சில் அடித்தது போல் பதிலுக்கு திட்டிய கர்ப்பிணி மனைவி
மயிலாடுதுறையில், பொது இடத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் அவரது கணவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் என்பவர் தனது மனைவி சுபாவிடம் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, காலால் எட்டி உதைத்ததில், கர்ப்பிணி பெண் வலியால் அலறி துடித்தார். பின்னர் அங்கிருந்தவர்கள் மீட்டு, சுபாவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கணவரான விஜயை ஊழியர்கள் தட்டிக் கேட்டபோது, அந்தர்பல்டி அடித்த சுபா, உங்களது வேலையை பார்த்துச் செல்லுங்கள் என சத்தமிட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.
Next Story