ஆம்புலன்ஸ் வராததால் நிறைமாத கர்ப்பிணியை போர்வையில் கட்டி தூக்கி சென்ற அவலம்

x

பழங்குடியின கிராமத்தில் ஆம்புலன்ஸ் வராததால் நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண், டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட அவலம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. பாலக்காடு அருகே பவானி ஆற்றோரம் இருக்கும் கடுகமன்னா கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்ல சரியான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் ஆற்றை கடந்து செல்ல தொங்கு பாலத்தை பழங்குடியினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், முருகன் என்பவரது மனைவிக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததாலும், காட்டு யானை அச்சம் இருப்பதாலும் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வரமுடியவில்லை. இதனால், பிரசவ வலியால் துடித்த பெண்ணை போர்வையில் கிடத்தி மூங்கில் கழியில் டோலி கட்டி மருத்துவமனைக்கு உறவினர்கள் எடுத்து சென்றுள்ளனர். சுமார் மூன்றரை கிலோ மீட்டருக்கு டோலியில் தூக்கி செல்லப்பட்ட பெண் கொட்டத்தாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுகரப்பிரசவத்தில் பெண் குழ்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்