கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் - நடுவழியில் நின்றதால் நடந்த விபரீதம்
கர்ப்பிணியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் - நடுவழியில் நின்றதால் நடந்த விபரீதம்
மத்தியபிரதேசத்தில் பிரசவத்திற்காக பெண்ணை அழைத்துச்சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துபோனதால், சாலையிலேயே அந்த பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மத்தியப் பிரதேசத்தின் பன்னா(Panna) மாவட்டத்தில், ரேஷ்மா என்ற பெண்ணுக்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அந்த ஆம்புலன்சில் பெட்ரோல் தீர்ந்துபோனதால், நடுவழியில் நின்றது. தொடர்ந்து சாலையிலேயே, அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர்கள் பிரசவம் பார்த்தனர்.
Next Story