காதலிப்பதாக கூறி மாணவிகளிடம் சேட்டை....இளைஞர்களுக்கு காத்திருந்த சிறை

x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அந்த பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேல்முருகனை சிறையில் அடைத்தனர்.

இதே போல் கரிவலம்வந்தநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகுரு என்பவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்