ஒரு மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்தி வைப்பு
நாடு முழுவதும் நீட் இளநிலை தேர்வு நடைபெற உள்ள நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு தற்போது இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது. இந்த நிலையில், நீட் இளங்கலை தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள் எழுதக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.நீட் தேர்வு ஒத்தி வைப்பு பற்றி, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story