QR கோடோடு கர்நாடக முதலமைச்சர் முகத்தை வைத்து ஒட்டிய போஸ்டர்கள்.. ஸ்கேன் செய்தால் புகார் அளிக்கலாமா?
கர்நாடகாவில் ஆளும் பாஜகவை 40 சதவீத கமிஷன் அரசு என விமர்சித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு ஒப்பந்தங்களுக்கு 40 சதவீத கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் எதிர்கட்சியான காங்கிரஸ், கமிஷன் குற்றச்சாட்டை கையிலெடுத்துள்ளது. பெங்களூருவில் தேர்தலுகாக ஒட்டப்பட்ட போஸ்டர்களில் முதலமைச்சரை வசூல்ராஜா பொம்மை என விமர்சிக்கப்பட்டுள்ளது. பே-சிஎம் என குறிப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, 40 சதவீத கமிஷன் குறித்து புகார் அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Next Story