"ஓபிஎஸ்ஸிடம் சொல்ல ஈபிஎஸ்-க்கு ஆசை" - புதிய பரபரப்பை கிளப்பிய ஜெ. உதவியாளர்

x

அதிமுக வேட்பாளர் வெற்றி பெற ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் இணைந்து பணியாற்ற வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விட்டுக்கொடுத்து விட்டு கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ்சிற்கு தன்னுடைய நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஈபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா? என்றும் பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு தென்னரசு பிடித்தமானவர் என்பதால், அவருக்காக ஓபிஎஸ் பணியாற்ற வேண்டும் என்றும் ஈபிஎஸ் தனது ஆசையை சொன்னால் அது குறித்து ஓ.பி.எஸ்சிடம் பேச நான் தயார் எனவும் பூங்குன்றன் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்