பொங்கல் பரிசு தொகுப்பு - நீதிமன்றம் உத்தரவு | Pongal
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை, தமிழக விவசாயிகளிடம் இருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, சுந்தர விமலநாதன் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட விவசாய பொருட்கள் பெரும்பாலும் அண்டை மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகவும், சில சமயங்களில் அவை தரமற்றவையாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு மாற்றாக, தமிழக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தால், அவர்கள் பலனடைவார்கள் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, பரிசுப் பொருள்கள் கொள்முதல் என்பது அரசின் கொள்கை ரீதியான முடிவு என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கோரிக்கை குறித்து, தமிழக கூட்டுறவுத்துறை செயலர், வேளாண்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.