கோவாக்சின் ஒப்புதலுக்கு அரசியல் அழுத்தம்...? | Covaxin vaccine | ThanthiTV

x

பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்குவதில் அரசியல் அழுத்தம் இருந்ததாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவில் 2021 ஜனவரியில் கோவாக்சின் தடுப்பூசியை அவசரக்கால பயன்பாட்டுக்கு செலுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசி பரிசோதனையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகவும், அரசியல் அழுத்தம் காரணமாக பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டதாகவும் வெளியான ஊடகச் செய்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது முற்றிலும் தவறான செய்தியென தெரிவித்திருக்கும் மத்திய அரசு, தடுப்பூசிக்கு அனுமதி வழங்களில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன; மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு நிபுணர்கள் குழு பரிசோதனை முடிவுகளை தீர ஆய்வு செய்தே ஒப்புதல் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளது. தங்களுக்கு எதிரான எதிர்மறை பிரசாரங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறியிருக்கும் பாரத் பயோடெக் நிறுவனமும், அரசியல் அழுத்தம் என்ற செய்தியை மறுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்