மஞ்சு விரட்டில் மாடு முட்டி உயிரிழந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மஞ்சு விரட்டு போட்டியில் மாடு முட்டி உயிரிழந்த காவலர் நவநீதகிருஷ்ணனின் உடலுக்கு, 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் வீட்டிலிருந்து காவலரின் உடலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தோளில் சுமந்த படி சென்றார். இதனையடுத்து, காவலரின் உடல், மயானக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story