வேங்கைவயல் சம்பவத்தில் சிக்கிய காவலர்களின் வாட்சப் ஆடியோ.."என் பையனை ஒத்துக்க சொல்றாங்க" - காவலரின் தந்தை வேதனை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் 147 பேரிடம் விசாரணை நடத்தி, அவர்களிடம் போலீசார் சாட்சியங்களை பெற்று வருகின்றனர். அதில் 11 பேரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளவும், 11 பேரில் முதல் ஆளான முரளிராஜா மற்றும் 9 ஆவது ஆளான கண்ணதாசன் ஆகிய இரு காவலர்களிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, சென்னை தடயவியல் ஆய்வகத்தில் குரல் மாதிரி பரிசோதனைக்காக வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த காவலர் முரளிராஜா மற்றும் கண்ணதாசன் ஆஜராகினர். இரு காவலர்களும் குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்படுவது தொடர்பாக, வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் ஆடியோ பதிவிட்டதில் சிக்கியது குறிப்பிடத்தக்கது...
Next Story