"பெரிய மருத்துவமனைகளில் காவல் நிலையம்"... அவசர சட்டம் விரைவில் கொண்டுவர கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம்

x

கேரள மாநிலம் கொட்டாரக்கரையில் அரசு பெண் மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி, பினராயி விஜயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்றும், பெரிய மருத்துவமனைகளில் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலர் மேற்பார்வையில், உள்துறை, சுகாதாரத்துறை, சட்டத்துறை செயலர்கள் விவாதித்து, திருத்தப் பரிந்துரைகளை அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சுகாதாரப் பல்கலைக்கழகம், பணியாளர்கள் அமைப்புகள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளும் பரிலீசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்