"போலீசார் சரியான அணுகுமுறையோடு நடந்து கொள்ள வேண்டும்"-டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு
காவல் நிலையத்துக்கு வருவோரிடம் போலீசார் சரியான அணுகுமுறையோடு நடந்து கொள்ள வேண்டும் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், காவல் துறையில் உள்ள சில அதிகாரிகள் தாங்கள் தான் உயர் அதிகாரிகள் என்ற மனப் போக்குடன் நடந்து கொள்வதாகவும், சில அதிகாரிகள் தாங்கள் யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்பது போல நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியானவர்கள் மேல் உயரதிகாரிகள், கமிஷனர்கள் ஆகியோர் உள்ளார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
சில சமயம் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், அதிகாரிகள் மெத்தன போக்கு காண்பித்தால், காவல்துறை மீது மக்களுக்கு உள்ள நன்மதிப்பு குறைந்துவிடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story