கர்ப்பிணியை 1 மணிநேரம் நிற்க வைத்த போலீஸ்... "ஹாஸ்பிட்டலுக்கு தான் சார் காசு இருக்கு" கெஞ்சிய கணவன்
கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்த முரசொலி, தனது மனைவி இலக்கியாவை பிரசவ சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
உறவுக்கார பெண்ணோடு சேர்ந்து மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் சென்றதால், போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆறுமுகம் தடுத்து நிறுத்தியுள்ளார்.
ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி கூறியுள்ளார். மருத்துவ செலவிற்கு மட்டுமே பணம் உள்ளதாகவும், பிரசவ வலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்கும்படி முரசொலி கெஞ்சியுள்ளார்.
இதை ஏற்க மறுத்த அவர், நிறைமாத கர்ப்பிணி உட்பட 3 பேரையும் ஒரு மணிநேரம் நிற்க வைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த தன்வந்திரி காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளரிடம் பேசி மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story