டிஜிபி காட்டிய அதிரடி.. தேனியில் 4 போலி மருத்துவர்களை தட்டி தூக்கிய போலீஸ்

x

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செயல்பட்டு வந்த 4 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர்.

அனைத்திந்தியா நிறுவனத்தில் 6 மாத கால மாற்று மருத்துவ பயிற்சியை முடித்த 61 பேர், மருத்துவம் பார்க்க அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த 61 பேரும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்வி நிறுவனத்தில் படித்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யாத மாற்று மருத்துவர்களை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பினார். இந்நிலையில் தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் 4 போலி மருத்துவர்களை கைது செய்த போலீசார், மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை கைப்பற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்