தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி பெண்... அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்
கேரளாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் அத்துமீறிய மருத்துவமனை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சூரில் உள்ள கயபமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்த மருத்துவமனை ஊழியரான தயாலால் மயக்க நிலையில் அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் தயாலாலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவசர அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
முதற்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க திருச்சூர் மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story