வங்கித்துறையின் முதுகெலும்பே தகர்ந்தது" - பிரதமர் மோடி..

x

மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு காணொலி காட்சி வாயிலாக, பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, வங்கி அமைப்புகள் மிக வலுவாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகக் கூறினார். முந்தைய ஆட்சியில் வங்கித் துறை சீரழிவில் இருந்ததாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, முந்தைய ஆட்சியில் வங்கித்துறை 140 கோடி மக்களுக்கானதாக இல்லை என்றும், குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கானதாக இருந்ததாகவும் பிரதமர் மோடி பேசினார். வங்கித்துறையில் நடைபெற்ற போன் பேங்கிங் ஊழலால் வங்கித்துறையின் முதுகெலும்பு தகர்ந்ததாகவும், 2014ம் ஆண்டுக்குப் பிறகு வங்கித்துறைக்கு தாங்கள் புத்துயிர் அளித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்