"ஊழலை வலிமையோடும் முழுமையாகவும் எதிர்க்க வேண்டும்" - பிரதமர் மோடி

x

ஊழலை வலிமையுடனும் முழுமையாகவும் எதிர்க்க வேண்டும் என்று இண்டர்போல் பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இண்டர்போல் பொதுச் சபைக் கூட்டம், டெல்லி பிரகதி மைதானத்தில் தொடங்கியது. இன்டர்போல் அமைப்பின் 195 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். ஆன்லைன் பயங்கரவாதம், டிஜிட்டல் மோசடி போன்ற புதுவடிவிலான பயங்கரவாதத்தை அணுக புதிய உத்திகளை வகுப்பதற்கு ஒவ்வொரு நாடும் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதம், இணையவழி குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு எதிராக உலகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவென்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஊழலை நாம் வலிமையாகவும், முழுமையாகவும் எதிர்க்க வேண்டியது அவசியம் என்றும் மோடி கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்