"பழமையான வரலாற்றை மீண்டும் அறிமுகப்படுத்த பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

x

பழமையான வரலாற்றை மீண்டும் அறிமுகப்படுத்த பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு" - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான பல துறைகள் சார்ந்த உறவை, நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில், காசி சங்கமம் என்ற நிகழ்ச்சி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிலையில்

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், பல நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டது காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் இடையிலான பாரம்பரிய கலாச்சார உறவு என கூறியுள்ளார். சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் , தொல்காப்பியத்திலும் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்தார். பல நூற்றாண்டு பழமையான வரலாற்றை அனைவருக்கும் மீண்டும் அறிமுகப்படுத்த பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு இது என்றும், இதில் எந்த விதமான அரசியலும் கிடையாது என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். மேலும் பாரதம் என்பது ரிஷிகளாலும், சனாதன சக்திகளாலும் கட்டமைக்கப்பட்டது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்