'பிரதமர் மோடி அழிவில்லாதவர்'... புகழும் சீன நெட்டிசன்கள்... பின்னணி என்ன?

x
  • பிரதமர் மோடியை செல்லப்பெயர் கொண்டு சீன நெட்டிசன்கள் அழைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • எல்லையில் அத்துமீறல் இந்தியாவை சீனா வம்புக்கு இழுத்து வரும் வேளையில், சீன நெட்டிசன்களால் கொண்டாடப்படும் வெளிநாட்டு தலைவராக இருக்கிறார், பிரதமர் மோடி.
  • அமெரிக்காவின் 'THE DIPLOMAT' பத்திரிகையில் இது தொடர்பாக சீன சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்யும் பிரபலமான சுன்ஷான் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
  • அதில் பிரதமர் மோடியை தாங்கள் பயன்படுத்தும் 'சினா வெய்போ' என்ற சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியை 'மோடி லவோக்சியன்' என செல்ல பெயரிட்டு அழைத்து வருகிறார்களாம், சீன நெட்டிசன்கள்.
  • லவோக்சியன் என்பதற்கு அழிவில்லாதவர் என்பது பொருள். குறிப்பாக பிரதமர் மோடியின் உடைகளால் சீனர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டிருப்பதோடு, அவரது கொள்கைகள் வித்தியாசமாக இருப்பதாகவும் கருதுகிறார்களாம்.
  • இதில் இந்தியாவை பற்றி சீனர்கள் அதிகம் பேசுவது என்ன? என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.
  • மேற்கத்திய நாடுகள் மிகவும் விரும்பும் தேசமாக இந்தியா இருப்பது எப்படி? ஏன் மேற்கத்திய நாடுகள் சீனாவை மட்டும் குறி வைக்கிறார்கள்? என்று தான் சீனர்கள் அதிகம் விவாதிக்கிறார்களாம்.

Next Story

மேலும் செய்திகள்