பாஜக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி

x

தேர்தலில் வெற்றி பெறுவதோடு நின்று விடாமல் மக்களின் இதயங்களை வெல்வதையும் உறுதி செய்ய வேண்டும்" என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக நிறுவப்பட்ட 44வது ஆண்டு தினத்தை முன்னிட்டு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றினார். இந்நிகழ்வில் காணொலி வாயிலாக தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அனுமனைப் போல இந்தியா இன்று தனது உண்மையான சக்தியை உணர்ந்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தீய சக்திகளை எதிர்க்கும் போது அனுமன் எப்படி கடினமாக மாறுவாரோ, அதேபோல் ஊழல், குடும்ப வாதம், சட்டம்-ஒழுங்கு என்று வரும் போது தேவைப்பட்டால் கடினமாக மாறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் குடும்பவாதம், சாதியவாதம் போன்றவற்றை அரசியல் கலாச்சாரமாக கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, பாஜகவின் தலைமையின் கீழ் நாடு முன்னேறுவதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் தனக்கு சவக்குழி தோண்டப்படுவதாக எச்சரிக்கும் அளவுக்கு இறங்கி வந்து விட்டதாகத் தெரிவித்தார். சட்டப்பிரிவு 370 குறித்து எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருவதாகத் தெரிவித்த மோடி, பல ஆண்டுகளாக பல கட்சிகள் சமூக நீதி என்ற பெயரில் குடும்பத்தின் நலனை மட்டுமே உறுதி செய்ததாகவும், ஆனால் பாஜகவோ சமூக நீதியிலேயே வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். வலுவான திட்டங்களை தீட்டி 2047 இல் முன்னேறிய இந்தியாவைக் காண பணியாற்ற வேண்டும் என தெரிவித்த அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று சிலர் பேசி வருவதாகவும், இருப்பினும் அதீத நம்பிக்கையில் இருந்து விடாமல்

கடினமாக பணியாற்ற வேண்டும் எனவும் பாஜக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்