யோசனைகள் வழங்க மாநிலங்களுக்கு பிரதமர் அழைப்பு | pmmodi | g20
யோசனைகள் வழங்க மாநிலங்களுக்கு பிரதமர் அழைப்பு
உலக வளர்ச்சிக்கு இந்தியா இன்னும் எப்படியெல்லாம் பங்காற்ற முடியும் என்பது குறித்து யோசனைகளை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், ஜி-20 நாடுகள் கூட்டமைப்புக்கு, வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இதையொட்டி, லோகோ, கருப்பொருள், இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டார். தாமரை மலர்வது போன்று இருக்கும் அந்த லோகோ, நம்பிக்கையின் அடையாளமாக திகழ்வதாகவும் அவர் கூறினார். புதிய இந்தியாவின் வேகமான திறமைகளால் ஒட்டுமொத்த உலகமும் ஈர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, நாம் வழிநடத்த வேண்டும் என்று உலகம் எதிர்பார்ப்பதாகவும், அதைவிட நாம் மிகச் சிறப்பாக செயல்படுவது நம் கடமை என்றும் தெரிவித்தார். ஒரே பூமி, ஒரே சுகாதாரம் போன்ற முன்னெடுப்புகள் மூலம் நீடித்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி, உலக நாடுகளுக்கு தலைமையாக புதிய இந்தியா உருவாகி வருவதாக தெரிவித்தார்.