ரிசல்ட் பார்த்து உயிரை விட்ட ப்ளஸ் 2 மாணவன்.. இரவோடு இரவாக காதலி விபரீத முடிவு - சென்னை அருகே அதிர்ச்சி

x

சென்னையை அடுத்த ஆவடியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்த நிலையில், மாணவனின் காதலியும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி, நேற்று இரவு வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கதவை உடைத்த உறவினர்கள், மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்ட ஆவடியைச் சேர்ந்த தேவா என்ற மாணவனை, இந்த மாணவி காதலித்ததும், அந்த வேதனையில் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. எனினும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்