"உங்க சுயநலத்துக்காக என் பிள்ளையோட வாழ்க்கையில விளையாடுறிங்க.." "இதே மாதிரி எத்தனை பிள்ளைங்க.." - கொந்தளித்த கை அழுகிய குழந்தையின் தாய்

x

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தையின் வலது கை அழுகிய விஷயத்தில் விசாரணை குழு அறிக்கை குறித்து குழந்தையின் தாயார் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஒன்றரை வயது குழந்தை முகமது மகிரின் வலது கை அழுகியதற்கு மருத்துவ அலட்சியமே காரணம் என தாய் குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையாக விசாரணாயை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்தது விசாரணை குழு...

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குழந்தையின் தாய் அஜிஷா, மருத்துவ அறிக்கையில் துளிகூட திருப்தி இல்லை என்றார். கொடுத்த புகாருக்கு எதிர்மாறாக மருத்துவ குழு அறிக்கை வந்துள்ளது என்றவர், மருத்துவர்களை தவிர்த்து வார்டில் வேறு யாரிடமும் விசாரிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

குழந்தை தீவிர எடைக் குறைவை கொண்டிருந்தது, இதய கோளாறு கொண்டிருந்தது என சொல்வதை ஏற்க முடியாது என்றார்.

அஜிஷா, பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய்

அமைச்சரும், அரசு மருத்துவர்களும், சனிக்கிழமையே குழந்தை பாதிக்கப்பட்டதாக சொன்னார்கள், இப்போது கை சிவப்பாக மாறியதை 29 ஆம் தேதியே தெரிந்துகொண்டோம் என அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார் அஜிஷா

29 ஆம் தேதி இரவு குழந்தையை மருத்துவர் பரிசோதித்தார் என அறிக்கையில் சொல்வதை ஏற்க முடியாது என்றார்.

அதேபோல் குழந்தைக்கு தொற்று பாதிப்பு இருந்ததாக 28 ஆம் தேதி தன்னிடம் சொல்லவில்லை எனவும் குற்றம் சாட்டினார்

இதுபோன்று இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காவே தனது போராட்டம் எனக் கூறும் அஜிஷா, முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விஷயத்தை கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



Next Story

மேலும் செய்திகள்