பறவைகளுக்கு எமனாகும் பிளாஸ்டிக் - வாயைத் திறக்க முடியாமல் அவதிப்பட்ட ஐந்தறிவு ஜீவன்

x

கோவை வாளாங்குளத்தில் நெகிழி கழிவு தனது அலகில் மாட்டிக் கொண்டதால் சிரமப்படும் பறவையின் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

எகிப்து நாட்டை பூர்வீகமாக கொண்ட பெலிகன் பறவைகள் வாளாங்குளத்தில் முகாமிட்டுள்ளன.

குளத்திற்குள் பெலிகன் மீனைக் கொத்த முயன்ற போது, மீனுக்கு பதிலாக அலகில் பிளாஸ்டிக் பை மாட்டிக் கொண்டது.

அதை அகற்ற அந்தப் பறவை மிகவும் போராடியது

. கழிவுப் பொருட்களை மக்கள் குளத்தில் வீசிச் செல்லும் நிலையில், இது போன்று வாயில்லா ஜீவன்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.

இதையடுத்து நெகிழிப் பொருட்களை குளத்தில் வீசி எறியாமல் குப்பைத் தொட்டியில் போட்டு பறவைகள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைக் காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்