கட்டிய சில மணி நேரத்தில் இடிந்து விழுந்த பரிதாபம் - பீதியில் மக்கள்

x

திருவண்ணாமலையில் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய், கட்டிய சில மணி நேரத்திலேயே இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலைஞர் நகர்புர மேம்பாட்டு திட்டதின் கீழ் கட்டப்பட்ட கால்வாயின் பக்க சுவர்கள், கட்டுமானம் முடிந்த அன்றே பெயர்ந்து விழுந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மழை காலங்களில் அதிகளவு மழைநீர், கழிவு நீர் என இந்த பகுதிக்கு வரும் நிலையில் கழிவு நீர் கால்வாயின் கட்டுமான பணிகள் தரமற்று உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து ஆய்வு நடத்திய நகராட்சி ஆணையர், தரமற்ற கால்வாய் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்